உள்ளூர் செய்திகள்

சவுதி அரேபியாவில் யோகா தினம் அனுசரிப்பு

ஜெத்தாவில் இந்திய துணைத் தூதரகம் சார்பில் சர்வதேச யோகா தினம் பார்க் ஹயாத் ஹோட்டலில் உலக பிரசித்தி பெற்ற மன்னர் ஃபஹத் நீரூற்றின் அழகிய பின்னணியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வானது, சவுதி யோகா குழு, ஒபுஹூர் மிதிவண்டி கிளப், DISHA குழு மற்றும் இந்திய சமூகத்தினர் ஆகியோர் ஒத்துழைப்பில் தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சவுதி யோகா குழு நிர்வாகிகள், தூதரக பிரதிநிதிகள், யோகா ஆர்வலர்கள் மற்றும் அயலக வாழ் இந்திய பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். யோகா குறித்த பொது விதிமுறைகளை யோகா பயிற்றுவிப்பாளர்கள் ஸல்வா சதீக் அல்மதானி மற்றும் ஐரம் கான் ஆகியோர் வழிநடத்தினர்.- நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !