சிங்கப்பூர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா
தொழிலாளர்களும் தொழிற்சாலைகளும் நிறைந்த சிங்கப்பூரின் மையப் பகுதியான ஈசூனில் அமைந்துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா வெகு விமரிசையாக - பக்தர்கள் நிரம்பி வழிய கோலாகலமாக நடைபெற்றது. அபிஷேகம் - அலங்காரம் - ஆராதனை என தெய்விக மணம் கமழ நடைபெற்ற விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ஆலயம் வலம் வந்த போது “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா “ ...ஞான வேல் முருகனுக்கு அரோகரா “ முழக்கம் விண்ணதிர வைத்தது. நிறைவாக பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை பாராட்டுக்குரியது.- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்