உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் சுதந்திர ( மணி விழா) தின கொண்டாட்ட கோலாகலம்

சிங்கப்பூர் தேசத்தின் அறுபதாவது சுதந்திரநாள் (ஆக.9) பிறந்தநாளை மக்கள் அனைவரும் ஓரணியாகவும் பேரணியாகவும் திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். நாட்டின் கொண்டாட்டத்தில் பங்கேற்று திளைக்க பாடாங்கிற்குப் படையெடுத்த மக்கள் எதிர்காலம் எங்கள் காலம் எனக்குதூகலித்தனர். பாடாங் திடலில் ஒன்றுகூடிய 27,000 பேரும் இவ்வாண்டின் கருப்பொருளான 'மாஜுலா சிங்கப்பூரா'வை விண்ணதிர முழங்கினர். அந்த முழக்கம் எட்டுத் திக்கும் எட்டியது.முடியும் நாள்கள் மட்டுமல்ல, இனி விடியும் நாள்களும் எங்கள் சிங்கப்பூரின் சிறந்த நாள்களே என சிவப்பும் வெள்ளையுமாக அத்தனை மக்களும் ஆடிப் பாடினர். அறுபது என்பது ஆண்டிற்குத்தான் பழையது; நாட்டிற்கு அது இன்னும் இளம்பருவமே. அதனை உணர்த்தும் வகையில், இன்னும் சாதிக்க வேண்டும் என்னும் இளமைத் துடிப்பை தேசிய தினக் கொண்டாட்டத்தில் காணமுடிந்தது.அதிபர் தர்மன் வாழ்த்துசிங்கப்பூர் சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தனம் அவரது சமூகவலை தள பதிவில்; ' தீவு முழுவதும் நாம் பல ஹீரோக்களை பெற்றுள்ளோம் ' என மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.- நமது செய்தியாளர், வெ.புருசோத்தமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !