உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு ஜப்பான் நாட்டின் உயரிய விருது

சிங்கப்பூர் மேனாள் பிரதமரும் இன்றைய மூத்த அமைச்சருமான லீ சியன் லூங்கிற்கு ஜப்பானின் உயரிய விருதான “ தி கிரேண்ட் கோர்டன் ஆஃப் த ரைசிங் சன் “ விருதினை இம்மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை ஒகாசாவுக்கும் தோக்கியோவுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளும் போது வழங்கி கவுரவிக்கவிருக்கிறது. ஒசாகாவின் எக்ஸ்போ 2025 சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையேயான 60 ஆண்டு கால ராஜ தந்திர உறவைப் பறை சாற்றும் வண்ணம் இவ்விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சநிலை உறவை உறுதிப்படுத்தும் வகையில் திரு லீயின் பயணம் அமையவிருக்கிறது. ஒசாகாவின் எக்ஸ்போ 2025 -.ல் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் தேசிய தின விழாவில் திரு லீ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுகிறார். எக்ஸ்போ 2025 அனைத்துலக அளவில் மனிதகுலம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலக நாடுகளிலுள்ள மக்களை ஒன்று திரட்ட இது உதவும். “ ட்ரீம் ஸ்பியர் “ என அழைக்கப்படும் சிங்கப்பூர் கூடத்தில் சிங்கப்பூரின் கதையும் புத்தாக்க உணர்வும் காட்சிப்படுத்தப்படும். லீ ஜப்பானியப் பிரதமரையும் சந்திக்க வாய்ப்புள்ளது. 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது ஜப்பானுக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்த ஒருவரைக் கவுரவிக்க வழங்கப்பட்டு வருகிறது.- நமது செய்தியாளர், வெ.புருஷோத்தமன் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !