சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
சிங்கப்பூர் ஈசூன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலங்காரங்கள், ஆராதனைகள், அன்னதானங்கள் கண்கவர்ந்தன. பதினெட்டாம் படி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ' சுவாமியே சரணம் ஐயப்பா... பதினெட்டாம் படி ஐயனே சரணம் பொன்னப்பா சரண கோஷம் மெய் சிலிர்க்க வைத்தது. ஐயப்ப பக்தர்களின் பஜனை உருக்கத்தை விளைவித்தது. ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்