உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கோகுலாஷ்டமி விழா கோலாகலம்

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ கோகுலாஷ்டமி விழா ( செப்-14 ) பக்தர்கள் ஆலயம் நிரம்பி வழிய மிக விமரிசையாக நடைபெற்றது. காலை எட்டு மணிக்கு மூலவர் ஸ்ரீ சிவ கிருஷ்ணருக்கு அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்று மஹா தீபாராதனை காட்டப்பட்டது.மரபுப்படி கோகுலாஷ்டமி இரவு நடைபெற்றது. 6.45 மணிக்கு மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். தொடர்ந்து குழந்தை கிருஷ்ணரின் தெய்விக ஒலியுடன் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு நடைபெற்றதும் ஆலயத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்து மலரிட்டும் பண மழை கொட்டியும் ஆராதித்தமை மெய்சிலிர்க்க வைத்தன.பக்தப் பெருமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ குழந்தை கிருஷ்ணனுக்கு உருக்கத்தோடு வழிபட்டமை நெஞ்சை நெகிழ வைத்தன. அபிஷேகம் - அலங்காரம் ஆலயத் தலைமை அர்ச்சகர் ஆகமப் ப்ரவீண நாகராஜ சிவாச்சார்யார் இசையோடு பாடி - நாதஸ்வர - தவில் ராக சமர்ப்பணம் செய்து கோகுலாஷ்டமியின் சிறப்பு பற்றி விரிவாக விளக்கினார். மாலையில் மங்கல இசை முழங்க ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஜே என பக்தர்கள் ஒலிக்க சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். அபிஷேகம் - அலங்காரம் - ஆராதனை என அனைத்திலும் மூழ்கிய பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.--- சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்