சிங்கப்பூர் ஆலயத்தில் கந்த சஷ்டி மூன்றாம் நாள் விழா
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கந்த சஷ்டி மூன்றாம் நாள் விழா நவம்பர் நான்காம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. பெருந் திரளாகக் கூடியிருந்த பக்தப் பெருமக்கள் சந்தனக் காப்பில் ஜொலித்த ஸ்ரீ முருகப் பெருமானின் சிறப்பு அபிஷேகத்தைக் கண்குளிரக் கண்டும், கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணத்தை மனமுருகிப் பாடியும், சத்ரு சம்ஹார த்ருசதி அர்ச்சனையை உருக்கத்தோடு கிரகித்தும், மகா தீபாராதனையின்போது 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ....வீரவேல் முருகனுக்கு அரோகரா' என முழங்கியும், அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதத்தைப் பரவசத்தோடு ஏற்றும் மனமகிழ்ந்து இல்லம் திரும்பியதாக ஆலய மேலாண்மைக்குழுவைச்சேர்ந்த சத்தீஷ் நமது செய்தியாளரிடம் பூரிப்போடு தெரிவித்தார். - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்