பிரியா பவானி சங்கருடன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் ஹரிஷ் கல்யாண்
ADDED : 1484 days ago
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் சந்தர் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
ஹரிஷ் கல்யாண், ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர் என்பதால் அந்த அனுபவங்களை தற்போதைய போட்டியாளர்களிடம் நினைவுக்கூர்வார் என்று தெரிகிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.