உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாண்டி படம் தள்ளிப்போனது

சாண்டி படம் தள்ளிப்போனது

நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடித்துள்ள படம். 3.33. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை அருகே ஒரு பங்களாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர், அரண்மனை படங்கள் தியேட்டர்களில் நிரம்பி வழிவதால் தியேட்டர் கிடைக்காதால் படம் தள்ளி போனதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !