தமிழில் வெளிவரும் நயன்தாராவின் மலையாள படம்
ADDED : 1451 days ago
மலையாள சினிமாவில் முன்னணி எடிட்டிராக இருக்கும் அப்பு என்.பட்டாத்திரி நயன்தாராவின் நெருங்கிய நண்பர். அவர் இயக்கிய படம் நிழல். இந்த படத்தில் நயன்தாரா, குஞ்சாகோ போபன், தியா பிரபா, லால் உள்பட பலர் நடித்திருந்தார்கள். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்திருந்தார், சரோஜ் குரூப் இசை அமைத்திருந்தார்.
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியான இந்த படம், தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் மாய நிழல் என்ற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட இருக்கிறது.