புஷ்பா திட்டமிட்டபடி டிசம்பர்17-ல் வெளியாகுமா?
ADDED : 1451 days ago
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் புஷ்பா. இப்படத்தில் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அப்படத்தின் மூன்று பாடல்கள் இன்னும் படமாக்கவில்லை என்பதால், திட்டமிட்டபடி புஷ்பா முதல் பாகம் டிசம்பர் 17ல் வெளியாக வாய்ப்பில்லை என்பது போன்று ஒரு செய்தி டோலிவுட்டில் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள படக்குழு, மூன்று பாடல்களும் நவம்பர் இரண்டாவது வாரத்திற்குள் படமாக்கி முடிக்கப்பட்டு விடும். அதனால் டிசம்பர் 17ல் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.