கலையரசன் ஜோடியாக மிர்னா
ADDED : 1504 days ago
‛மா, லட்சுமி' உள்ளிட்ட குறும்படங்களையும், நயன்தாரா நடித்த, ‛ஐரா' படத்தையும் இயக்கிய சர்ஜுன், கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. கலையரசன் நாயகனாக நடிக்க, மிர்னா நாயகியாக நடிக்கிறார். ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.