இது என் படம்: ப்ரியா பவானி சங்கர்
ADDED : 1456 days ago
தெலுங்கில் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தை தமிழில், ஹரிஷ்கல்யாண், ப்ரியாபவானிசங்கர் நடிக்க, ‛ஓ மணப்பெண்ணே' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் விரைவில் வெளியாகிறது.
நடிகை ப்ரியா பவானி சங்கர் கூறுகையில், ‛‛இப்படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம். ஹரீஷ் நல்ல ஒத்துழைப்பு தந்தார். மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாக தான் பாத்திரம் இருக்கும், ஆனால் இப்படத்தை தைரியமாக என் படம் என சொல்வேன். அந்தளவு என் கதாப்பாத்திரம் அழுத்தமாக இருந்தது,'' என்றார்.
இயக்குனர் கூறுகையில், ‛‛பெல்லி சூப்புலு படத்தை கெடுத்து விடாமல், தமிழுக்கு ஏற்றபடி மாற்றம் செய்துள்ளோம். ஹரிஷ், ப்ரியாபவானிசங்கர் வந்தபின் படத்திற்கு பலம் வந்து விட்டது. படத்திற்கு தேவையான எதையும் நான் புதிதாக செய்யவில்லை,'' என்றார்.