உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பையில் என்னை தெலுங்கு பெண் என்கிறார்கள் : பூஜா ஹெக்டே பெருமிதம்

மும்பையில் என்னை தெலுங்கு பெண் என்கிறார்கள் : பூஜா ஹெக்டே பெருமிதம்

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவரான பூஜா ஹெக்டே அதன்பிறகு தெலுங்கில் அதிகமாக நடித்து வந்தவர் இரண்டு ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அந்தவகையில் மும்பை பெண்ணான பூஜா ஹெக்டே, தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் கூறுகையில், நான் மும்பை பெண்ணாக இருந்தாலும் பாலிவுட்டில் கூட என்னை தெலுங்கு நடிகை என்று தான் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளேன். அங்கு தான் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மும்பையில் என்னை தெலுங்கு பெண் என்று அழைப்பதை பெருமையாக கருதுகிறேன். அந்த அளவுக்கு தெலுங்கு சினிமா எனக்கு மரியாதை அளித்து, என்னை ஒரு நடிகையாக வளர்த்து விட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே அந்த கதாபாத்திரமாக மாறி உணர்வுப்பூர்வமாக நடித்து வருகிறேன் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !