முதல் எழுத்தை எழுதிய திலீப்பின் மகள்
ADDED : 1449 days ago
மலையாள நடிகர் திலீப் தனது முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியரை விவாகரத்து செய்துவிட்டு அதன்பின்னர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே முதல் மனைவி மூலமாக டீன் ஏஜ் பருவத்தில் மீனாட்சி என்கிற மகள் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது.
தற்போது இரண்டு வருடங்கள் ஆன நிலையில் விஜயதசமி தினத்தன்று வழக்கமான நடைமுறையான வித்யாபரம் எனப்படும் குழந்தைக்கு கல்வி அறிவு புகட்டும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார் திலீப். முதல் எழுத்தாக அம்மா என்கிற வார்த்தையை எழுத வைத்த திலீப், இந்த நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.