உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை : தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு

விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை : தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்து பொதுமக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்தநாள் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அப்போது மருத்துவக்குழு மறுத்தது.

அதோடு, தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆணையம் விவேக் மரணம் குறித்த ஆய்வு அறிக்கை கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி காரணமாக நடிகர் விவேக் மரணமடையவில்லை. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !