மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1440 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1440 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1440 days ago
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ஜெய் பீம். பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒரு கூரையில்லாத ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ஜெய் பீம் விவரிக்கிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கதையில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்தவாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதுவரை வெளியான சூர்யா படங்களின் டீசர் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. இந்நிலையில் இன்று(அக்., 22) படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போலீஸ் காட்டும் அடக்குமுறை, அவர்களின் நீதிக்காக போராடும் சூர்யா என டிரைலர் காட்சிகள் பரபரப்பாக அமைந்துள்ளன.
‛‛பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கணும், அதை நீதிமன்றம் உறுதி செய்யணும். தப்பு செய்பவர்களுக்கு ஜாதி, பணம் என நிறைய இருக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம தான இருக்கோம். நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மவுனம் ஆபத்தானது'' உள்ளிட்ட வசனங்கள் டிரைலரில் கவனம் ஈர்த்துள்ளன. பரபரப்பாக நகரும் டிரைலர் காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ.,2 ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிது.
1440 days ago
1440 days ago
1440 days ago