இசை பிரளயத்திற்காக - பார்த்திபன் டுவீட்
ADDED : 1527 days ago
நடிகர் பார்த்திபன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் இரவின் நிழல். ஒரே ஒரு ஷாட்டில் முழு மொத்த படத்தையும் எடுத்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் .இந்தநிலையில் பார்த்திபன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இரவின் நிழல் படத்திற்கு இன்று ஏ.ஆர்.ஆர். பின்னனி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தையும் முதலில் பார்த்தது ஆஸ்கார்தான். இது சிங்கிள் ஷாட் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும், உதாரண படமாகவும் இருக்கும். இடம் பாராட்டி- கீபோர்டில் விரல் ஓட்டினார்-வைரலாகப்போகும் இசை பிரளயத்திற்காக என்று பதிவிட்டுள்ளார்.