உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு

கடந்த மக்களவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சட்டசபை தேர்தலுக்கு அக்கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். இப்படி ஏதாவது அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதோடு ஆளும் கட்சிகளின் ஊழல் குறித்தும் கடுமையாக விமர்சிப்பார் மன்சூரலிகான்.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மன்சூர் அலிகானுக்கு 2,500 சதுர அடியில் உள்ள வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்திருக்கிறார்கள். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அதற்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !