யாராலும் தடுக்க முடியாது - அஜித் பற்றி போனி கபூர்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தற்போது வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார் போனிகபூர். இதையடுத்து அஜித்தின் 61வது படத்தையும் தான் தயாரிக்கப்போவதாக ஒரு பேட்டியில் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த படத்தையும் வினோத் தான் இயக்கு வார் என்கிற செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுகுறித்த இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
மேலும், வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டுள் ளார் போனிகபூர். அதோடு, அவரது ஆர்வத்தையும், கனவையும் நனவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது. உலக அளவில் அஜித் நேசிக்கப்படுகிறார் என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.