கிளாமர் பிரின்சஸ் ரவீனாவின் காதலர் இவர்தானா?
ADDED : 1446 days ago
மெளனராகம் சீரியலின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடித்து வரும் ரவீனா, சீரியலில் அடக்க ஒடுக்கமாக அம்சமாக நடித்து அசத்தி வருகிறார். ஆனால் அதேசமயம் இன்ஸ்டாவில் இளசுகளை சூடேற்றும் வகையில் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு 'கவர்ச்சி இளவரசி' என பெயர் எடுத்துவிட்டார். அதிகமான பாலோவர்களை கொண்டுள்ள ரவீனா தாஹா சமீபத்தில் தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த வைரல் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் குமுறி வருகின்றனர்.
காரணம் அந்த புகைப்படங்களில் ரவீனா தனது ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். மேலும் அந்த நபர் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாக விஸிட் கொடுத்ததையும் கேப்ஷனில் பதிவிட்டு, 'நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்போமா?' என ஆங்கிலத்திலும் கேட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ஒருவேளை அந்த நபர் ரவீனாவின் காதலராக இருக்குமோ என பொறாமையில் பொங்கி வருகின்றனர்.