தலைவர் என்றாலே அதிர்வலை தான்: ரஜினிக்கு சச்சின் புகழாரம்
ADDED : 1437 days ago
67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரஜினிக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் எழுதி இருப்பதாவது: ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால், தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.