தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு
ADDED : 1438 days ago
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்த தனி நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமனம் செய்ததோடு மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அமர்வு நீதி மன்றம், தனி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.