உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னங்க சார் உங்க சட்டம் ஓடிடியில் வெளியாகிறது

என்னங்க சார் உங்க சட்டம் ஓடிடியில் வெளியாகிறது

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய சட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த விஷயத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் தான் என்னங்க சார் உங்க சட்டம்.

புதுமுகம் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது படம் வருகிற 29ம் தேதி சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளிவர இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை, தொடர்ச்சியா வெளிவர காத்திருக்கும் பெரிய படங்களால் சிறிய பட்ஜெட் படங்கள் திரையிட தியேட்டர் கிடைக்காமல் ஓடிடி நோக்கி செல்கின்றன. அந்த வரிசையில் இந்த படமும் ஓடிடியில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !