காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீண்டும் ஒரு மாற்றம்
காற்றுக்கென்ன வேலி சீரியலில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒருபுறம் சைலன்ட்டாக ஹிட் அடித்து வருகிறது. ஆனால், அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திர நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அந்த தொடரின் சாரதா கதாபாத்திரத்தில் ஜோதி ராயும், நாயகன் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமனும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தொடரின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வீணா வெங்கடேஷ் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல நடிகை சுஜாதா பஞ்சு மீனாட்சியாக நடித்து வருகிறார். இப்படி இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களின் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால் சீரியல் முடிவை நோக்கி செல்கிறதா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.