புதிய கண்ணம்மா இவர் தானா? சூப்பர் மாடல் ஆச்சே இவங்க
ADDED : 1540 days ago
பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷினி விலகுவதாக தகவல் வந்ததையடுத்து அவருக்கு பதிலாக இன்ஸ்டாகிராம் மாடல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக ரோஷினி நடித்து வந்தார். இந்நிலையில் சில பர்சனல் காரணங்களுக்காக அவர் தொடரிலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானதையடுத்து ரோஷினி நடித்து வந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது ரோஷினிக்கு பதிலாக டிக்டாக் மூலம் பிரபலமான வினுஷா தேவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ரோஷினியின் விலகல் குறித்தோ, வினுஷா தேவி தொடரில் இணைவது குறித்தோ சேனல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.