உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி: ரஜினி

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி: ரஜினி

சென்னை: '' ஜனாதிபதியையும் ,பிரதமரையும் சந்தித்தது மகிழ்ச்சி'' என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த 67வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன், என ரஜினி தெரிவித்திருந்தார்.


விருது வாங்கிய பின்னர், ஜனாதிபதி மாளிகை சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, ரஜினியை தொலைபேசியில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. தமிழக கவர்னர் ரவி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்து பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !