மறுஜென்ம கதையில் மிரட்ட வரும் ‛வனம் - டிரைலர் வெளியீடு
ADDED : 1442 days ago
ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனம். இதன் டிரைலரை சசிகுமார், மஞ்சுவாரியர், சேரன் உள்ளிட்ட 24 திரைப்பிரபலங்கள் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். மறுஜென்மத்தை மையமாக வைத்து பேண்டஸி த்ரில்லர் கலந்த கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும் என்கிறார்கள். அதற்கேற்றவாறு படத்தின் டிரைலரிலேயே காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக டிரைலரின் முடிவில் வனம் தொடர்பான டாப் ஆங்கிள் காட்சி அருமையாக உள்ளது.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள விக்ரம் மோகன் கூறுகையில், ‛‛இயக்குனருடன் ஏற்கனவே அறிமுகம் உள்ளதால் இப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முன்பே லொகேஷன் பார்த்து திட்டமிட்டதால் படப்பிடிப்பு எளிதாக இருந்தது, படம் நிச்சயம் பேசப்படும் என்றார்.
வனம் படத்தை கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன் தயாரிக்க, சக்திவேல் பிலிம்ஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. ரான் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார்.