உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆறு மொழியில் மின்னல் முரளி

ஆறு மொழியில் மின்னல் முரளி

பாசில் ஜோசப் இயக்க, டோவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள மின்னல் முரளி படம் டிச. 24ல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். 90களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், மின்னல் தாக்கத்தால், சூப்பர் ஹீரோவாக மாறும் நாயகனை பற்றி இப்படம் பேசுகிறது. மலையாளத்தில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியிலும் வெளியாகிறது.

டோவினோ தாமஸ் கூறுகையில், ‛‛மின்னல் முரளி படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக, அனைவரையும் திரையுடன் கட்டிபோட்டு வைக்கும்படியாக இருக்கும். சூப்பர் ஹீரோ மின்னல் முரளி என்ற ஜெய்சன் பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நடிப்பது சவாலாக இருந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !