உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் புனித் ராஜ்குமார் கடைசி புகைப்படம்

வைரலாகும் புனித் ராஜ்குமார் கடைசி புகைப்படம்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூருவில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மதியம் முதலே சமூக வலைத்தளங்களில் புனித் பற்றிய பதிவுகள் மிக அதிகமாக இடம் பெற்று வருகிறது.

அவரது படங்களைப் பார்க்காதவர்களும், அவரைப் பற்றித் தெரியாதவர்களும் கூட அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் செய்த பல சமூக சேவைகளும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. அனாதை இல்லம், முதியோர் இல்லம், கால்நடை பராமரிப்பு இல்லாம், ஏழை மக்களுக்கான படிப்பு வசதி என பலவற்றை அவர் செய்து கொடுத்துள்ளார்.

பொது நிகழ்வாக தனது அண்ணனின் திரைப்பட விழாவில் கடைசியாகக் கலந்து கொண்டார் புனித் ராஜ்குமார். மேலும் நேற்று காலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதுதான் அவர் உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படமாக அமைந்துவிட்டது.

இந்தியத் திரையுலகத்தினர் பலரும் புனித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். சிலர் நேரில் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !