உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாஸ்டர் செப் தெலுங்கு : தமன்னா இடத்தில் அனசுயா

மாஸ்டர் செப் தெலுங்கு : தமன்னா இடத்தில் அனசுயா

தமிழ், தெலுங்கில் ஆரம்பமான டிவி நிகழ்ச்சி மாஸ்டர் செப். தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சி சில வாரங்கள் ஒளிபரப்பான பிறகு தெலுங்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மேலும், சில காரணங்களால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மீது தமன்னா வழக்கு தொடரவும் முடிவு செய்தார்.

இந்நிலையில் தமன்னாவுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் நேற்று முதுல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இது குறித்து நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “நீங்கள் வாருங்கள், நான் சம்பாதிக்கிறேன், நீங்கள் கிசுகிசு செய்யுங்கள், நான் பாஸ் ஆகிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமன்னா தொகுத்து வழங்கிய போது ரேட்டிங் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது, தற்போது அனசுயா தொகுத்து வழங்குவது எப்படி இருக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !