கன்னியாகுமரியில் 'பத்து தல' படப்பிடிப்பு
ADDED : 1437 days ago
கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.
அது குறித்து பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில், “கன்னியாகுமரியில் ஒரு வாரமாக 'பத்து தல' படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். இங்கு படப்பிடிப்பு நடப்பதில் மகிழ்ச்சி. மிக அற்புதமான ஒரு நகரத்தில் இருக்கிறேன். மக்கள், வானிலை, உணவு, ஊரின் அமைதி எப்போதும் என இதயத்தில் இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கவுதம் கார்த்திக் ஜோடியாக பிரியா நடிக்கிறார். சிம்புவுக்கு படத்தில் ஜோடி இல்லை. ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.