உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் பிறந்தநாளில் விக்ரம் டீசர்?

கமல் பிறந்தநாளில் விக்ரம் டீசர்?

கமல் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வருகிறது 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள். எனவே விக்ரம் படத்திலிருந்து ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் அந்த அப்டேட் படத்தின் டீசராகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நவம்பர் 6-ம் தேதி படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்றும் படக்குழுவில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !