தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பிக்பாஸ் நிகழ்ச்சி
ADDED : 1435 days ago
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக பிக்பாஸ் எபிசோடு ஒளிபரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 கோலாகலமாக தொடங்கப்பட்டு வெற்றியுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ரியாலிட்டி ஷோக்களிலும், சீரியல்களிலும் பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு எபிசோடுகள் ஒளிபரப்பபட்டு வருவதை போல பிக்பாஸ் ஷோவிலும் தீபாவளிக்கான சிறப்பு எபிசோடு தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.