இன்ஸ்டா ரீல்ஸில் டுவிஸ்ட் வைத்த பவித்ரா : ஷாக்கான ரசிகர்கள்
சின்னத்திரை நடிகையான பவித்ரா ஜனனி தனது காதலர் இவர் தான் என அறிமுகம் செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா ஜனனி. முன்னதாக இவர் நடித்த 'ஈரமான ரோஜாவே' சூப்பர் ஹிட் ஆனதையடுத்து இந்த தொடரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சின்னத்திரை ஹீரோயின்களில் டாப் பட்டியலில் இருக்கும் பவித்ரா ஜனனி சமீப காலங்களில் சோஷியல் மீடியாக்களை ஆக்டிவாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது காதலர் இவர் தான் எனக் கூறி இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் 'எங்கிருந்தாலும் வாழ்க'என சோக கீதத்துடன் வாழ்த்துகள் சொல்ல தயாராகிவிட்டனர். ஆனால், அந்த வீடியோவில் உண்மையில் அவர் பிரபல கார்டூன் கேரக்டரான ஷ்ரக்கின் உருவ பொம்மையுடன் நின்று கொண்டு தான் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் கேப்ஷனின் கீழ் பகுதியில் 'எனக்கு வேற வழி தெரியல மக்களே..சாரி' என்று கூறி தான் சிங்கிளாக இருப்பதை உறுதிப்படுத்தி டுவிஸ்ட் கொடுத்துள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் மீண்டும் காதல் புறாக்களை பறக்க விட்டு தூதுவிட்டு வருகின்றனர்.