உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெய் பீம் பர்த்து கண்கள் குளமானது : கமல் டுவீட்

ஜெய் பீம் பர்த்து கண்கள் குளமானது : கமல் டுவீட்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள ஜெய் பீம் படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கதையில் பழங்குடி இருளர் இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனும் பாராட்டி உள்ளார்.

கமல் டுவிட்டரில், ‛‛ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !