ஆக்டிவா இருப்பேன், செலக்டிவா நடிப்பேன் : மீரா ஜாஸ்மின்
ADDED : 1435 days ago
தமிழில் ரன், புதிய கீதை, கஸ்தூரிமான், சண்டக்கோழி, பெண் சிங்கம் என பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். 2014ல் திருமணம் செய்து கொண்டவர் அதன்பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயராமை வைத்து சத்தியன் அந்திக்காடு இயக்கிவரும் புதிய படத்தில் நாயகியாக நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவர் இயக்கத்தில் ஏற்கனவே ரசதந்திரம், வினோத யாத்ரா உள்பட நான்கு படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் துபாயில் மீரா ஜாஸ்மினுக்க கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சினிமாவில் எனது செகண்ட் இன்னிங்சை தற்போது தொடங்கியுள்ளேன். முன்பு போலவே ஆக்டிவாக இருப்பேன், அதேசமயம் செலக்டிவான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.