சஸ்பென்ஸ் த்ரில்லர் ‛இறுதிப் பக்கம்'
ADDED : 1435 days ago
மனோ வெ.கண்ணதாசன் எழுதி இயக்கியுள்ள இறுதிப்பக்கம் படம் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இயக்குனர் அளித்த பேட்டி: படத்தில் நடிக்கும் பாத்திரங்களை ரசிகர்களால் ஒரே மாதிரியே யூகிக்க முடியும். ஆனால் நாவல்களை படிக்கும் போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியே இந்த இறுதிப்பக்கம் படம். ஒரு கொலையும், அதற்கான காரணங்களும், கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத படமாக இருக்கும். எனக்கு அமைந்த திறமையான படக்குழுவால் 70 சதவீத படத்தை ஆரம்பத்திலேயே முடித்த திருப்தி வந்து விட்டது. நாயகியாக அம்ருதா ஸ்ரீநிவாசன் நடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.