திருப்பதி கோயிலில் விஷால் வழிபாடு
ADDED : 1435 days ago
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எனிமி. நாளை(நவ.,4) தீபாவளியை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் விஷால்.
கடந்தாண்டே திருப்பதி செல்ல எண்ணியிருந்தார் விஷால். கொரோனா பிரச்னையால் அப்போது செல்ல முடியவில்லை. இதனால் இன்று சென்று தனது வேண்டுதலையும், நேர்த்திகடனையும் செலுத்திள்ளார் விஷால். கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் விஷால். அவருடன் அவரது நண்பரும், நடிகருமான ரமணாவும் உடன் சென்றார்.
இதனிடையே திருப்பதி கோயிலுக்கு நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜாவும் வந்துள்ளார். அவருடன் இணைந்து விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.