5 வருடங்களுக்கு பின் இணையும் குஞ்சாக்கோ - ஜெயசூர்யா
ADDED : 1435 days ago
மலையாள சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என இப்போதும் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன், விரைவில் ரெண்டகம் என்கிற படம் மூலம் தமிழுக்கும் வர இருக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புதிதாக நடிக்க உள்ள 'எந்தாடா ஷாஜி என்கிற படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். தனுஷின் மாரி படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபன் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நடிகர் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஸ்வப்னகூடு, ஸ்கூல் பஸ், குல்மால் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ஷாஜகானும் பரீக்குட்டியும் என்கிற படத்தில் நடித்திருந்த இவர்கள் இருவரும், இந்தப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.