உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்ஸ்டாவில் லவ் ப்ரபோஸ் செய்த ரசிகர் : என்ன சொன்னார் கிருத்திகா?

இன்ஸ்டாவில் லவ் ப்ரபோஸ் செய்த ரசிகர் : என்ன சொன்னார் கிருத்திகா?

மெட்டி ஒலி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிருத்திகா அண்ணாமலை. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் மரகதவீணை, பாசமலர், கல்யாண பரிசு, வம்சம் என பல ஹிட் தொடர்களில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட கிருத்திகா நடிப்புக்கு ப்ரேக் போட்டுவிட்டு வீட்டை பார்க்க சென்று விட்டார். தற்போது சன் டிவியின் 'பாண்டவர் இல்லம்' என்ற மெகாத்தொடரில் ரேவதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு சூப்பரான கம்பேக்கை கொடுத்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கிருத்திகாவின் ப்ரொபைலை தேடி அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இன்ஸ்டாவில் சூப்பரான பிட்னஸுடன் இருக்கும் க்ருத்திகாவின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர் சிங்கிளாக தான் இருப்பார் என நினைத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் 'ஆஸ்க் மீ' டாஸ்க்கை இன்ஸ்டாகிராமில் ஓப்பன் செய்த கிருத்திகாவிடம் அவரது தீவிர ரசிகர் ஒருவர் 'என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என்று கேட்டு் பதிவிட்டுள்ளார். அதற்கு தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கிருத்திகா 'இவர் என் மகன் சகோதரா' என டீசெண்ட்டாக பதிலளித்துள்ளார். ஆர்வக்கோளறில் அந்த ரசிகர் கேட்ட கேள்விக்கு மிகவும் பொறுப்புடன் பதில் சொன்ன கிருத்திகாவை மற்ற ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !