வினோத்துக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு - வாழ்த்து மழை பொழியும் பிரபலங்கள்
விஜய் டிவி சீரியல் நடிகர் வினோத் தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினோத். இவர் சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வினோத் - சிந்து தம்பதிகள் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு அசத்தி வந்தனர். லவ்லி கப்புள்ஸாக வலம் வரும் இந்த ஜோடியை ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் சிந்து தனது இண்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை வினோத் இன்ஸ்டாவின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சக நடிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வினோத் - சிந்து தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.