அரண்மனை3 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி
ADDED : 1434 days ago
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கன்னா, விவேக், யோகிபாபு, சாக்ஷி அகர்வால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் அரண்மனை 3. முந்தைய அரண்மனை வரிசை படங்களுக்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த பட த்துக்கும் கிடைத்தது. பல தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நாளை தீபாவளி படங்கள் ரிலீசாவதால் அரண்மனை தியேட்டர்களில் இருந்து தூக்கப்படலாம். ஆனால் அதற்குள்ளாகவே அதன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகிவிட்டது. குடும்ப ரசிகர்களை மகிழ்வித்த இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கும் அரண்மனை 3 படம் வரும் நவ., 12ல் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.