உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கர்-ராம்சரண் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

ஷங்கர்-ராம்சரண் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

2018ல் வெளியான ரஜினிகாந்த் நடித்த 2.O படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன்-2 படத்தை தொடங்கினார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த சில பிரச்சனைகளால் கிட்டத்தட்ட அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். இதையடுத்து தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை ஆரம்பித்தார் ஷங்கர்.

இந்தியன்-2 படத்தை இடையில் விட்டுவிட்டு இந்த புதிய படத்தை அவர் ஆரம்பிப்பதற்கு சில எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து ராம்சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் ஷங்கர். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராம்சரண் - ஷங்கர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !