மலையாள படத்தில் எகிப்து நடிகை
ADDED : 1429 days ago
துபாயில் பிறந்து எகிப்தில் வளர்ந்தவர் மீரா ஹமீது. மாடல் அழகியாக இருக்கும் இவர் எகிப்திய படங்கள், இசை ஆல்பங்களில் நடித்து வந்தார். அடிப்படையில் மலையாளியான இவர் டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் புகழ்பெற்றவர்.
விது வின்சென்ட்டின் அடுத்த படமான வைரல் செபி படத்தின் மூலம் நடிகை ஆகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: இது ஒரு ரோட் மூவி. இதில் நான் ஜோர்டான் பெண்ணாக நடிக்கிறேன். சாலையில் பயணிக்கும் என்னுடன் வழிப்போக்கராக செல்லும் ஒருவர் லிப்ட் கேட்டு என் வாகனத்தில் ஏறுவார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை திகிலுடன் சொல்லும் படம்.
இந்த படத்திற்கு பிறகு மேலும் சில மலையாளம் மற்றும் தமிழ் பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வரும். என்கிறார்.