உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சஞ்சய் தத்துடன் துபாயில் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்

சஞ்சய் தத்துடன் துபாயில் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்

இந்த வருடம் தீபாவளியை துபாயில் கொண்டாடியுள்ளார் மோகன்லால். அதுவும் அன்றைய தினம் துபாயில் தங்கியுள்ள சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளார் மோகன்லால். இந்த வருடம் அவர் துபாயில் தீபாவளி கொண்டாட காரணம் இருக்கிறது.

கடந்த வருடம் தான் துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட கட்டடம் ஒன்றில் புதிய பிளாட் வாங்கினார் மோகன்லால். அதனால் இந்த வருடம் தீபாவளியை தனது புதிய வீட்டில் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த வருடம் இதே நவம்பரில் தான் புற்றுநோய் சிகிச்சை பெற்று, துபாய் திரும்பி ஓய்வெடுத்து வந்த நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து நலம் விசாரித்தார் மோகன்லால். அதனால் இந்தமுறையும் தீபாவளிக்காக துபாய் சென்றபோது சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் மோகன்லால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !