உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா

பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. சாதனையார்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலை துறையில் சினிமாவில் சாதனை படைத்து வரும் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் கங்கனா சினிமாவில் இதுவரை 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி-யில் சிறப்பாக நடித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !