திருமண தடைக்கு யார் காரணம்
ADDED : 1435 days ago
ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் தபு (51). இன்னும் திருமணம் செய்யாமலேயே உள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: என் சகோதரனுக்கு நடிகர் அஜய்தேவ்கன் நெருங்கி நண்பர். நாங்கள் மும்பையில் ஒன்றாக வசித்த போது, என் ஒவ்வொரு நகர்வையும் அஜய்தேவ்கன் கவனித்து கொண்டே இருப்பார். நான் யாரிடமாவது பேசினால் அவனுடன் அஜய்தேவ்கன் சண்டை போடுவார். அதனால் தான் நான் திருமணம் செய்யாமல் இருந்துவிட்டேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அஜய் தேவ்கன், நடிகை காஜோலை திருமணம் செய்துள்ளார். ஒன்றிரண்டு இந்தி படங்களில் தபு, அஜய் தேவ்கன் இணைந்து நடித்துள்ளனர்.