மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
1421 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1421 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1421 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1421 days ago
மலையாள சின்னத்திரை உலகின் முன்னணி நடிகை சந்திரா லட்சுமணன். தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி, ரஞ்சித் நடித்த அதிகாரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு குறைந்ததும் சீரியல் பக்கம் சென்றவர் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் அவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் தொடர்களில் நடித்துள்ளார்.
38 வயதாகும் சந்திரா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது ஸ்வந்தம் சுஜாதா மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலை சந்திரா ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
நேற்று முன்தினம் இவர்களது திருமணம் கேரளாவில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டார்கள். சந்திரா, டோஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
1421 days ago
1421 days ago
1421 days ago
1421 days ago