7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கும் ஹனிரோஸ்
ADDED : 1470 days ago
பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். முதல் கனவே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். இவர் நடித்த சரித்திரம் என்ற படம் வெளிவரவில்லை. கடைசியாக 2014ம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்தார்.
தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர்.சி ஜோடியாக நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் கதையான இதில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாகவும், ஹனிரோஸ் பத்திரிகை நிருபராகவும், ஜெய் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்திருக்கிறார்கள். பத்ரி இயக்கி உள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.